- கொள்ளு - 200 கிராம்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- தனியா - 1 டீஸ்பூன்
- தக்காளி - 2
- காய்ந்த மிளகாய் - 4
- பூண்டு - 5 பல்
- சிறிய வெங்காயம் - 10
- புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
- கறிவேப்பிலை - 10 இலைகள்
- கொத்தமல்லி இலை
- உப்பு - தேவையான அளவு
குக்கரில் கொள்ளுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், தனியா, மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
வெந்த கொள்ளை அதனுடன் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும்
ஆறிய பின்பு உப்பு சேர்த்து 3/4 பதமாக அரைக்கவும்.