Monday, September 13, 2010

தாளிச்ச தயிர்

தேவையானப் பொருட்கள்:
 வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு

 சீரகம்  - 1 /2  டீஸ்பூன்
பூண்டு - 1 பல்
எண்ணெய் - தாளிக்க
உப்பு
தயிர் - 2 கப்   


செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். 
  • அடுத்து கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவும் .
  • அதன் பிறகு வெங்காயம் , மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
  • இதை ஆற வைக்கவும்.
  • சீரகம், பூண்டு இவற்றை நுணுக்கி வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தயிர், அரைத்த சீரகம் பூண்டு , வதக்கியவை , உப்பு (தயிர்க்கு தேவையானது) சேர்த்து கலக்கவும்.
  • சுவையான தாளிச்ச  தயிர்  ரெடி .
  • இட்லி ,தோசை, மற்றும் சாதத்துடனும் மிக சுவையாக இருக்கும் .

No comments: