Tuesday, February 17, 2009

கொள்ளு துவையல் / kollu thuvayal Kongu special

  • கொள்ளு - 200 கிராம்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • தனியா - 1 டீஸ்பூன்
  • தக்காளி - 2
  • காய்ந்த மிளகாய் - 4
  • பூண்டு - 5 பல்
  • சிறிய வெங்காயம் - 10
  • புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
  • கறிவேப்பிலை - 10 இலைகள்
  • கொத்தமல்லி இலை
  • உப்பு - தேவையான அளவு
குக்கரில் கொள்ளுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், தனியா, மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும் வெந்த கொள்ளை அதனுடன் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும் ஆறிய பின்பு உப்பு சேர்த்து 3/4 பதமாக அரைக்கவும்.