Monday, May 12, 2008

அரிசி பருப்பு சாதம் / Kongu Special arisi paruppu sadam

தேவையானப் பொருட்கள் புழுங்கல் அரிசி - 1 கப் துவரம்பருப்பு - 1/4 கப், சி. வெங்காயம் - 10, ப. மிளகாய் - 1, வர மிளகாய் - 2, மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன், தக்காளி - 2, கறிவேப்பிலை கடுகு - தாளிக்க தேவையான அளவு. பொடிசெய்துகொள்ள ------------------- மிளகு - 1/4 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், சோம்பு - 1/2 டீஸ்பூன் பூண்டு - 5 பல் செய்முறை சின்ன வெங்காயம், தக்காளியை நறுக்கவும். பச்சமிளகாய், வரமிளகாயை கீறி வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வரமிளகாய், பச்சமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன் பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பொடிசெய்து வைத்துள்ளவற்றை சேர்த்து வதக்கவும். இரண்டே கால் (21/4) கப் தண்ணீர் ஊற்றவும். மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரிசி பருப்பை போட்டு குக்கரை மூடவும். குக்கரில் இரண்டு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்!! சாப்பிடும் பொழுது நெய் சேர்த்து சாப்பிடவும்.